வேறு நினைப்பு
கதை
வேறு நினைப்பு
கு.ப. ராஜகோபாலன்
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
சித்திரை மாதத்தில் பௌர்ணமி இரவு; ஊதா வர்ண நிலா. மாடி வெட்டவெளியில் நாற்காலியைக் கொண்டுபோய்ப் போட்டுக்கொண்டு சாய்ந்துகொண்டேன். ஆனால் அந்த நிலவில் வியப்பொளியுடன் துலங்கிய வெளியுலக அழகை நான் அப்பொழுது அனுபவிக்க முடியவில்லை. அன்று விடிந்தது முதல் உள்ளத்தில் இடைவிடாமல் உறுத்திக்கொண்டிருந்த கதையின் மனோதத்துவச் சிக்கல்தான் அப்பொழுதும் என் நினைவிலிருந்தது.
என் மனைவி வந்து அருகில் இருந்த பெஞ்சின் மேல் உட்கார்ந்ததுகூட எனக்குத் தெரியாது,