புருஷார்த்தங்களின் தோற்றமும் வரலாறும்
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
புருஷார்த்தங்களின் தோற்றமும் வரலாறும்
தி. முருகரத்தனம்
புருஷார்த்தங்களின் அறிமுகம்
இந்தியப் பண்பாட்டு மரபில் பண்டுமுதல் இன்றுவரை புருஷார்த்தங்கள் என்னும் கருத்தாக்கம் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது. இக்கருத்தாக்கம் மக்கள் வாழ்வின் அனைத்துப் பாங்குகளையும் - குடும்பம், சமூகம், அரசியல், கலைகள், சமயம்... ஆகிய
வற்றையும் - அவற்றின் போக்கு நோக்கு ஆகிய வற்றையும் விளக்கி வகுத்துத் தந்துள்ளது.
இப்புருஷார்த்தங்கள் முப்பகுவு - முப்பால், நாற்பகுவு - நாற்பால்; திரிவர்க்கம், சதுர்வர்க்கம் என வழங்கப்படுவன. திரிவர்க்கமாவது தர்மம், அர்த்தம், காமம் என்பனவாகும். இவை தமிழில் அறம், பொருள், இன்பம் என விளக்கப்பட்டன. சதுர்வர்க்கமாவது தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என மீள்தொகுப்புப் பெற்றது. மோக்ஷம் - மோட்சம் சமயம்