சங்க இலக்கியங்களில் வைதிகநெறியின் சூழலும் செல்வாக்கும்
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
சங்க இலக்கியங்களில் வைதிகநெறியின் சூழலும் செல்வாக்கும்
பா. சங்கரேஸ்வரி
ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் செல்வாக்கு மிகச் சாதாரணமாக நிகழ்ந்துவிட இயலாது. ஒரு மொழியின் சமூக, அரசியல், பண்பாடு, கல்வி ஆகிய தளங்களில் மற்றொரு மொழி பெறும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்ட தொடர்பு சமஸ்கிருத மொழியின் செல்வாக்காக இங்குக் கருதப்படுகிறது. சமூக, அரசியல், பண்பாட்டு நிலைகளில் பிராமணர்களின் செல்வாக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இச்சமூகப் பண்பாட்டுப் பின்னணியில் சங்க இலக்கியம், மொழிப்பெயர்ப்பு ஆகிய மொழி ஆட்சிப் பகுதிகளில் வைதிக நெறியின் செல்வாக்கு விவரிக்கப்படுகிறது.
சமூக, அரசியல் பின்புலம்
ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் தமிழர் வாழ்க்கைமுறை நில அடிப்படையி