ஞானாம்பாள் சமேத பிரதாப முதலியார் சரித்திரம்
சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
ஞானாம்பாள் சமேத பிரதாப முதலியார் சரித்திரம்
ராணிதிலக்
என் வீட்டில் என்னைத் தவிர, மற்றவர்கள் எல்லாரும் சுரத்தினாலும் அம்மையினாலும் உபாதை பட்டார்கள். அவர்களைப் பலபேர் வந்து விசாரிக்கிறதும் உபசாரம் செய்கிறதுமாயிருந்தார்கள். என்னை ஒருவரும் விசாரிக்காதபடியால், நான் ஒரு மூலையில் அழுதுகொண்டிருந்தேன். எல்லாரும் ஓடி வந்து, “ஏன் அப்பா! அழுகிறாய்” என்று கேட்டார்கள். “எனக்குச் சுரமாவது அம்மையாவது வரவில்லையே!” என்று தேம்பித் தேம்பி அழுதேன்.
என் பாட்டியாருக்கு, மூன்றாம்முறை சுரம் வந்துகொண்டிருந்தது. எங்கள் வீட்டிலிருந்த கடியாரம், மத்தியானம் இரண்டு மணி அடித்தவுடனே, சுரம் வருவது வழக்கமாயிருந்தபடியால், கடியாரம் ஓடாமல் நின்றுவிட்டால் சுரமும் வராமல் நின்றுபோகுமென்று நினைத்துக் கடியாரத்தை நிறுத்திவிட்டேன். அப்படிச் செய்தும்