தமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
தமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை
இரா. அறவேந்தன்
இரு மொழிகளுக்கு இடைப்பட்ட உறவைக் கட்டமைக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன; பலவகைப்பட்ட தரவுகள் உள்ளன. அவற்றில் ‘இலக்கண நூல்கள் எழுதப் பெறுதல்’ எனும் ஒற்றைத் தளத்தின் வழித் தமிழ் சமஸ்கிருத உறவை அடையாளப் படுத்த விழைகின்றது இந்த எழுத்துரை.
‘தொல்காப்பியம்’, ‘யாப்பருங்கலக்காரிகை’, ‘இறையனார் அகப்பொருள்’, ‘வீரசோழியம்’, ‘நேமிநாதம்’, ‘தண்டியலங்காரம்’, ‘நன்னூல்’ என நீளும் தமிழ் இலக்கண வரலாற்றில் வடமொழிகளுள் ஒன்றான சமஸ்கிருதம் குறிப்பிடத்தக்க ஆளுகை செலுத்தியுள்ளது. சங்க இலக்கியம் தொட்டு இற்றை இலக்கியம் வரையிலான தமிழ் இலக்கியப் படைப்பாக்க மரபில் சமஸ்கிருதம் குறிப்பிடத்தக்க இடம்