உள்ளக் கிளர்ச்சி
கதை
உள்ளக் கிளர்ச்சி
மௌனி
ஓவியம்: செல்வம்
பாஞ்சாலி புக்ககத்திலிருந்து பிறந்தகத்திற்குத் தன்னந் தனியாக ரயிலில் வந்துகொண்டிருந்தாள். அவள் ரயிலை விட்டு இறங்கியபோது, இரவு மணி பத்து இருக்கும். எதிர்பாராத விதமாக அன்று வண்டி அந்த நேரத்தில் வந்துசேர்ந்தது. அப்பொழுது மழைக் காலம். ‘சோ’வென்று மழை பெய்துகொண்டிருந்தது. அந்த மழைக்காகப் பாஞ்சாலி அன்றிரவு ஸ்டேஷனிலேயே தங்கியிருந்து விட்டுப் பொழுது விடிந்ததும் ஊருக்குப் போகலாம் என்று ஒரு கணம் நினைத்தாள். ஆனால் அந்தப் பட்டிக்காட்டு ஸ்டேஷனில் தங்கிப் போவதற்கு அவளுக்குப்