அறிமுகம்
சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
மாயூரம் வேதநாயகம்பிள்ளை (1826 - 1889)
தமிழ் நாவல் இலக்கியத்தின் முன்னோடி என்று போற்றப்படும் முன்சீப் வேதநாயகம் பிள்ளை, சவரிமுத்து – ஆரோக்கியமரி இணையருக்கு 11-10-1826இல் திருச்சிக்கு அருகேயுள்ள குளத்தூரில் பிறந்தவர். பத்து வயதுவரை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றவர், பின் திருச்சி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். ‘தியாகப் பிள்ளை’ என்பவரிடம் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றைப் பழுதறக் கற்றார்.
1848இல் தமது இருபத்திரண்டாவது வயதில் திருச்சி நீதிமன்றத்தில் ஆவணக்காப்பாளராகப் பணியாற்றினார். 1850இல் அங்கேயே மொழிபெயர்ப்பாளராகவும் பணிப