காத்திருக்கும் படைப்பாளி
1981ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தேன். அங்கு எனக்கும் முன்னரே பணியாற்றிய இந்திரா பார்த்தசாரதி என்னைக் கல்லூரி முதல்வரிடம் அறிமுகம் செய்துவைத்துத் தமிழ் விரிவுரையாளராகச் சேருவதற்கு உதவிபுரிந்தார்.
தில்லியில் தாகூர் பாரத் நாடகசபையின் தயாரிப்பாக எஸ். ராமனாதன் இயக்கத்தில் இ.பா.வின் நாடகமான ‘மழை’ மேடையேறியது. இதில் எஸ்.கே.எஸ். மணி, அவரது துணைவியார் ஜமுனா இருவரும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். தாய் மகள் அல்லது தந்தை மகன் என இருவருக்கும் இடையே நட்புறவின் பின்னணியில் உள்ள பாலியல் ஈர்ப்பினைச் சுட்டிக்காட்டும் இந்நாடகம் பின்னர் ந. முத்துசாமியின் கூத்துப்பட்டறையின் தயாரிப்பாக அரங்கேறியது. சே. ராமாஜனும் இயக்கத்தில் சிற்றரங்கில் நான் இந்நாடகத்தின் ஒளியமைப்பாளனாக இருந்தேன். வீட்டின் ஜன்னல் வழியாக மழைநீர் எப்பொழுதும்