நொய்யல்: தெளிவின்மையின் மெய்யறிவு
எட்வர்ட் சைத் தன்னுடைய புகழ்பெற்ற ‘கீழைத்தேயவியல்’ நூலில், ஒரு ஐரோப்பியருடைய பார்வை அவரினத்தவருடைய சொல்லாடற்பண்பிற்கும் ஒரு கீழைத்தேயத்தவருடைய சொல்லாடற் பண்பிற்கும் இடையிலான வேறுபாட்டை இப்படி வரையறுப்பதாகக் குறிப்பிடுகிறார்:
“ஐரோப்பியர் பகுத்தறிவுவாதி. உண்மை பற்றிய அவருடைய அறிக்கைகள் குழப்பங்களிலிருந்து விடுபட்டது, தர்க்கத்தைக் கற்றிருக்காவிட்டாலும் அவர் சுபாவத்திலேயே தர்க்கவாதி. உண்மையை எந்த விகிதத்திலும் ஒப்புக்கொள்வதற்குச் சான்றுகளை வேண்டும் சந்தேக சுபாவி. அவருடைய பயிற்றுவிக்கப்பட்ட அறிவுத்திறன் தேர்ந்த எந்திரத்துவத்துடன் வேலை செய்கிறது. மறுபுறம் ஒரு கீழைத்தேயத்தவருடைய மனமோ அதன் சித்திரத்தன்மை கொண்ட தெருக்களைப் போலச் சமச்சீர்த் தன்மைக் குறைபாடுள்ளவை. நியாயப்படுத்தல்கள் வழுக்கும் பண்பு கொண்ட விவரணைகளாலானவை… அவருடைய விளக்கங்கள் மிக