வேத ரிஷிகளின் கவிதை மூலமும் காலமும்
(1928) (1948)
“புதியன விரும்பு” என்ற பாரதி, “வேதம் புதுமை செய்” என ஆத்திசூடியில் முழக்க மிட்டார். வேதம் புதுமை செய்ய விழையும்முன் பண்டைய வேதப் பரப்பில் படிந்து, பயின்று, ஆய்ந்து திளைத்தார் பாரதி. புதுவை வாழ்க்கை, வேத இலக்கியத்தில் ஆழ்ந்து திளைக்க ஓர் அருந்துணையை அரவிந்தர் வடிவில் வழங்கியது. புரட்சியில் முளைத்து யோகத்தில் நிறைந்த அரவிந்தரின் மாளிகையிலே அன்றாடம் வேதக் கல்வியும் வேத ஆராய்ச்சியும் அரங்கேறின.
அந்த நித்த நிகழ்வைப் பாரதியின் மகள் சகுந்தலா, “என் தந்தையார் வேதம் படிப்பதற்காகச் சில நாள் ஸ்ரீ அரவிந்தரின் மாளிகைக்குப் போவார். இ