ஒரு குறள், இரு குரல்கள்
திருக்குறள், திருவள்ளுவர் பற்றிப் பேசும்போது மிகையான உரிச்சொற்களில் எழுத வேண்டும் என்று எழுதப்படாத விதியிருக்கிறது. அத்துடன் மேல்நாட்டினரின் ஒப்புகை இருந்தால் இன்னும் நலம். எடுத்துக்காட்டாக இரண்டைத் தருகிறேன். திருவள்ளுவர் ‘வார்த்தைகளின் வாத்தி’, ‘அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளில் தெய்வீகமான இளவரசர்’. இவற்றைச் சொன்னவர் திருவாசகம் புகழ் ஜி.யூ. போப். இந்தக் கும்பிடு மனப்பான்மை இல்லாமல் திருக்குறளின் இரண்டு ஆங்கிலத் திருப்புதல்கள் வெளிவந்திருக்கின்றன. வழக்கத்தை மீறி - ஆங்கில விற்பன்னர்கள் அல்லர் - இரண்டு தமிழர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஒருவர் கவிஞர், புனைகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சமூ