பின்னை மானுட யுகத்தின் தொடக்கம்
‘
‘பின்னை மனிதம்’ என்றொரு பதம் வெகுநாட்களாகவே புழக்கத்தில் உள்ளது. பின்னை மனிதம் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஆய்வுத்துறையாகும். மெய்யியல், அறிவியல் தொழில்நுட்பம், விமர்சனக் கோட்பாடு, பண்பாட்டு ஆய்வுகள் என வெவ்வேறு துறைகளின் ஆய்வுமுறையை இது எடுத்துக்கொள்கிறது. இந்த ஆய்வுகள் சிந்தனை, பண்பாடு சார்ந்த மனித எல்லைகளைக் கடந்த பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்வதைத் தீவிரமாக விவாதிக்கிறது.
பின்னை மனிதம் என்ற கருத்தாக்கமானது மாற்று மனிதம் (Trans Humanism), தொழில்நுட்ப ஓர்மை (Technological Singularity), பின்னை மனிதப் பெண்ணியம் (Post human Feminism) விமர்சனப் பின்னை மனிதம் (Critical Post Humanism) என விரிவடைந்துள்ளது. இங்கு மாற்று மனிதம் என்ற கருத்தாக்கம் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம் தொடர்பானது. தொழில்நுட்ப ஓர்மை, மனித அறிவைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நு