பன்னாட்டுப் புத்தகச் சந்தையும் பாடநூல் கழகமும்
பன்னாட்டுப் புத்தகச் சந்தை, உலக அளவில் ஃபிராங்ஃபர்ட், லண்டன், பாரிஸ், பெய்ஜிங், ஷார்ஜா, இஸ்தான்புல், ஜாகர்த்தா, தில்லி உள்ளிட்ட இருபது நகரங்களில்தான் நடந்துள்ளது. அந்த நகரங்களின் வரிசையில் இப்போது சென்னையும் இணைந்துள்ளது.
சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற 46ஆவது புத்தகச் சந்தையுடன், பன்னாட்டுப் புத்தகச் சந்தையும் மூன்று நாள்கள் (ஜனவரி 16, 17, 18) நடைபெற்றது. பன்னாட்டுப் புத்தகச் சந்தை என்றவுடன், அங்கு இருப்பவை பல்வேறு நாடுகளின் பல மொழிப் புத்தகங்களா? பல்வேறு நாட்டு நூல்களை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்களா? ப.பு. சந்தையில் என்ன இருக்கும்? கொரியப் புத்தகங்கள் தமிழ் பேசுகின்றனவா? ஆங்கிலத்தில் பேசுகின்றனவா? புத்தகங்கள் வாங்கலாம் என்றால், ஒரு டாலர் இன்றைக்கு எத்தனை ரூபாய்? இப்படிப் பல கேள்விகள், அரங்கின் சிவப்புக் கம்பள விரிப்பைக் கடக்கும் சில நொடிகள