சாப்பிட்ட தட்டு
மன்னத்து பத்மநாபன்
வைக்கம் போராட்டம் (2020 )பற்றிய முழு விவர நூலை உருவாக்கிய காலத்தில் நான் மேற்கொண்ட பல்லூர்ப் பயணங்களைக் கவனித்திருந்தார் கண்ணன். நூல் வெளிவந்தபோது நான் சேகரித்த பல விவரங்கள் நூலில் இடம் பெறாததைச் சுட்டினார். நூலின் குவிமையத்திற்குள் வர இயலாததால் அவற்றை நான் சேர்க்காததைத் தெரிவித்தேன். அப்படியானால் அவற்றைத் தனியே நீங்கள் எழுதலாமே என்றார். வேறு நண்பர்களும் இதைக் குறிப்பிட்டனர்.
சத்தியாகிரகி ஒருவரின் கண்ணில் எதிரிகள் சுண்ணாம்பைத் தடவிய அராஜகம், பெரியார் இருந்த ‘ஆருக்குட்டி’ ச் சிறையைத் தேடியது, பெரியாரை மீண்டும் வைக்கம் செல்ல ஒட்டாமல் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட கைது, டி. ஆர். கிருஷ்ணசாமி ஐயரின் வாழ்க்கை வரலாற