கண்டடைதல்
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
‘சிராயன்குழிக்குப் போறியளா இல்ல பள்ளியாடிக்கா?’
‘மூத்தவன் எப்ப வாரான்?’
‘குட்டி பொறப்பிட்டுட்டாளா?’
‘லே.. குழி வெட்ட செல்லியாச்சா?’
போஸ் அண்ணன் கேட்டுக்கொண்டிருந்தான்.
நேற்று இரவு முத்தலக்குறிச்சி இறக்கத்தில் என் பெரியப்பா மகன் லாரன்ஸ் சாலை விபத்தில் இறந்துவிட்டான். போஸ்ட்மார்ட்டம் முடிந்து இன்று மதியம்தான் உடல் கிடைத்தது. நாளைக் காலை பதினோரு மணிக்கு அடக்கம். ஃப்ரீஸர் பாக்ஸில் அவனை வைத்திருக்கிறோம். இரவுக்குள் சவப்பெட்டி வாங்கப் போக வேண்டும். இப்போது திங்கள்சந்தையிலும் சவப்பெட்டி விற்கும் கடைகள் வந்துவிட்டதாக ஐயப்பன் சொன்னான். லாரன்ஸின் அடுப்ப கூட்டுக்காரன்.
அப்பா இறந்தபோது