தெருவிலே விட்டுவிட்டார் ராகுல்
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை சென்ற ராகுல்காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நடைப்பயண’த்தில் பங்கேற்கும்படி 2022 நவம்பர் 22இல் எனக்கு மின்னஞ்சல் அழைப்பு வந்தது. சமத்துவமின்மை, பிரிவினை, சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிராகச் சமூக மனச்சாட்சியைத் தூண்டும் விதத்தில் மக்களோடு உரையாடல் நடத்தும் வகையில் இந்த நடைப்பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதன் நோக்கத்தை எடுத்தியம்பியது அக்கடிதம். ‘நடைப்பயணத்தில் இணைந்து நடக்க நீங்கள் வர வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறோம்’ என்று கூறியதுடன் ‘ஒருவேளை ஏதாவது காரணத்தால் வர இயலவில்லை என்றாலும் மனரீதியாக எங்களுடன் இணைந்திருங்கள்’ என்றும் தெரிவித்தது.
அவ்வழைப்பைப் பார்த்தவுடன் ‘கட்டாயம் சென்று பங்கேற்கலாம்’ என்று என் மனதில் தோன்றியது. இதை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோதுத