கூடுவிட்டுக் கூடுபாயும் இலக்கிய வித்தைக்காரர்
அனுபவம் இன்றிப் படைப்பு இல்லை. அனுபவத்தில் இரண்டு வகை. ஒன்று சுயமாக வாழ்ந்து பெற்ற அனுபவம். இன்னொன்று, பார்த்து, கேட்டு கிடைக்கும் அனுபவம். சுய அனுபவங்களைப் படைப்பாக்குவது ஒப்பீட்டளவில் எளிது. புற அனுபவங்களைப் படைப்பாக்கும் போது அவற்றை ஒரு படைப்பாளி எந்த அளவுக்கு ஆழமாக உள்வாங்கி அகவயப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதைப் பொறுத்தே அந்த அனுபவம் படைப்பாக வெளிப்படும். சுய அனுபவம் சார்ந்த படைப்புகளிலும் இந்தச் சவால் வேறொரு விதத்தில் முளைக்கும். படைப்பாளியின் தன்னிலை பிரதிபலிக்காத பாத்திரங்களையும் படைப்பாளியின் தன்னிலையோடு நேரடித் தொடர்பு இல்லாத நிகழ்வுகளையும் கையாள்கையில் இந்தச் சவால் உருக்கொள்ளும். இந்தச் சவாலைப் பெரிய அளவில் எதிர் கொள்ளும் படைப்பாளிகளில் ஒருவர் இமையம். இவருடைய படைப்புகளில் பெரும்பாலானவை அதிகம் தன்னிலை சாராத புறவழி அனுபவங்களையும் நிகழ்வுகளையும் கொண்டவை. அதனாலேயே படைப்பாளிக்