தலைச்சாயம் பூசாத இளம் ஆய்வாளர்கள்
அரசு கல்லூரிகளைப் பற்றிப் பொதுப்புத்தியில் இருக்கும் ஒழுக்கம், கல்வி, அறிவுநிலைசார்ந்த நடுத்தர வர்க்க ஒவ்வாமைக்கு எதிர்நிலையில் பல நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் ஒன்றாகத் திருச்சி தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழாய்வுத்துறையும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து நடத்திய பெருமாள்முருகன் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கைச் சொல்லலாம். இரண்டு நாட்கள் (07,08.01.2025) நடைபெற்ற கருத்தரங்கின் எட்டு அமர்வுகளில் பதினெட்டுப் பேர் கட்டுரை வழங்கினர். அ. செல்வராசு வரவேற்றார். முதல்வர் கா. வாசுதேவன் தலைமை தாங்கி பெருமாள்முருகனுக்கும் தனக்குமான நட்பைப் பகிர்ந்துகொண்டார்.
திணைக்கோட்பாடு, அமைப்பியல், புழங்குபொருள் பண்பாடு, வெளிக்கோட்பாடு, பெண்ணியம், உளவியல், படைப்பரசியல், பாலியல், உடலரசியல், ஆய்வு முறையியல் முதலிய பல களங்களில் ‘தலைச்சாயம் பூசாத’ இளம் ஆய்வாளர்கள் கருதுகோளை மெய்ப்பிக்கும் வகையில் விமர்சனத்தோடு தம் பார்வைகளை முன்வைத்தனர்.
தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் பங்கேற்றனர். கா. விக்னேஷ் ‘க