மொரிஸ் மைனர்
ஓவியம்: செல்வம்
சாம் என்னை விருந்திற்கு அழைத்த செய்தி, நிறுவனத்தின் ஒவ்வொரு அறையிலும் மணிக்கு எண்பது மைல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. அவளுக்கென்ன, இப்படியெல்லாம் வாடிக்கையாளர்கள் வாய்த்த அதிர்ஷ்டக்காரி, சாமிடம் இருக்கும் கிளாஸிக் கார்களைப் போல அவளும் ஒரு வின்டார்ஜ் சட்டத்தரணியாக நிலைத்திருப்பாள், இன்னும் கொஞ்ச நாட்களில் அவளது பெயர் லண்டன் முழுவதும் சுற்றிவரப் போகிறது. அன்றைய நாள் பேச்சொலிகள் என்னைச் சுற்றிப் பரவசத்துடன் வட்டமடித்தன.
மதியம் தாண்டி விவாதத்துடன் விறுவிறுப்பாக ஆரம்பித்த நிர்வாகக் கூட்டம் உச்சத்திற்குச் சென்று போலியாக நடித்து வித்தைகளைக் காட்டி ஆட்டம் முடிவுறும் தருணத்தில் இறுக்கம் களைவதுபோல் ஒருவருக்கொருவர் சிரிப்பொலியின் பின்னணியில் உரையாடிக்கொண்டிருக்கையில் எனக்க