வைக்கம் நூற்றாண்டு நிறைவு இதையும் செய்து முடிக்கலாமே...
பெரியார் நினைவிடம், வைக்கம்
வைக்கம் நூற்றாண்டு விழா (12.12.2024)நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைக்கத்தில் இறங்கும்போது காலை 7:15. ஊர் தொடங்கும் இடத்திலிருந்த பெரியார் நினைவகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. மங்கல இசை, மலர் அலங்காரம், காவல் துறையின் குவிப்பு, கழுத்தில் அடையாள அட்டைகள் தொங்க இளம் வயது அதிகாரி களின் நடமாட்டம். பெரியாரின் நினைவகம் (1994) கட்டப்பட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நவீனமாகியிருக்கிறது. கீழ்த்தளத்தில் மட்டுமிருந்த கண்காட்சி முதல் தளத்திற்கும் நீட்சி கண்டுள்ளது. சுமார் 60 பேர் அளவில் அமர வசதியுள்ள அரை வட்ட ‘கேலரி’ அமைப்புடன் சிறு நாடக அரங்கம், மாடியில் இரு விருந்தினர் அறைகளும் கீழ