கடுக்கிட்டி முடுக்கிட்டி
ஓவியம்: மணிவண்ணன்
இடது கையில் நங்கூரம் போன்ற ஒரு வடிவத்தை டாட்டூ போட்டுக்கொள்வதற்காக அவன் அந்த அறையில் காத்திருந்தான். அவனுக்கு முன்னால் இருந்தவன் வத்தலாய், அதே சமயம் கொஞ்சம் முரட்டுத்தனமானவனாய்த் தெரிந்தான். கீழ் உதட்டை இறுக்கிக் கடித்தபடி, கையில் எழுதப்படும் பெயரையே அவன் ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் அந்த வலியை மீறித் தெரிந்த பரவசத்திலிருந்தே அது அவன் காதலியின் பெயராய் இருக்கக் கூடுமென யோகேஷ் ஊகித்தான். ஆனால் அவன் முகம் அப்படியான ஒரு காதலுக்குச் சம்பந்தமே இல்லாததுபோல் தெரிந்தது. யோகேஷ் தன்னுடைய கைகளை உயர்த்திப் பார்த்தான். இதில் யாருடைய பெயரை டாட்டூ குத்திக்கொள்வது என்று யோசித்தான். உடனே அவன் கையில் சம்பூர்ணத்தின் பெயர் டாட்டூவாகத் தோன்றியது. ஆச்சரியத்தில் அவன் கண்கள் விரிந்தன.
நான் சம்பூர்ணத்