‘இத்திசைதான் எல்லை இலது’
‘இத்திசைதான் எல்லை இலது’
ஜெ. சுடர்விழி
‘தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ்’ என்கிற முதல்வரியோடு 1988இல் சுந்தர ராமசாமியால் தொடங்கப்பெற்ற காலச்சுவடு இதழ், சில நெருக்கடிகள் காரணமாக எட்டு இதழ்களில் நின்று போக, 1994 அக்டோபரில் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று நிமிர்ந்தெழுந்து இனி ‘கண்ணன் என் ஆசிரியன்’ என்று உலகுக்கு அறிவித்தது. ‘உளுத்துப்போன மதிப்பீடுகளையும் புழுதி மண்டிய சொற்களையும் தாண்டிப் புதிய மொழியையும் வாழ்வின் புதிய அர்த்தங்களையும் அடைவதற்கான களமாகத் தன்னைத் தகவமைத்துக்கொள்வதன் மூலம் தனது இருப்பை நியாயப்ப