புதிர் என்னும் சுழல்
பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரரின் ஓய்வறிவிப்பு, அவருடைய ஆளுமையை எப்படிப்பட்டது என்று உணர்த்தும்படி அமையும். எந்தவொரு சலனமும் இல்லாமல் ஓய்வை அறிவித்த ராகுல் திராவிட்டும், யாரும் எதிர்பார்க்காதபோது டெஸ்டிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்த தோனியும் இந்தக் கூற்றுக்கு வலு சேர்க்கிறார்கள். அவர்களுடைய ஓய்வறிவிப்பு தனித்த நிகழ்வல்ல; அவர்களுடைய ஆளுமையின் வெளிப்பாடு. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், எல்லா கிரிக்கெட் நட்சத்திரங்களும் இதற்குள் வந்துசேர்வார்கள். ரவிச்சந்திரன் அஸ்வினும் இதற்கு விதிவிலக்கல்ல.
அஸ்வின் ஏன் ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து, அதுவும் பார்டர் காவஸ்கர் தொடர் யார் பக்கம் செல்லும் என்று தெரியாமல் நிர்க்கதியில் நிற்கும்போது தனது ஓய்வை அறிவிக்க வேண்டும்? தன்னுடைய மண்ணைச் சேர்ந்த இளைய சகா வாஷிங்டன் சுந்தர் தன்னை மிஞ்சும்போது தான் அணியில் தொடர்வது சரியில்லை எ