வசவும் வடுவும்
முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகளின்போது (2021) அவரது சாதனைகளைப் பாராட்டிய சிலர், அவரது அரிய கண்டுபிடிப்பு ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டனர். அந்த அரிய கண்டுபிடிப்பு: டாக்டர் மன்மோகன் சிங்! கேட்பதற்கு முரணாகத் தோன்றலாம். நரசிம்ம ராவ் பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கு முன்னரே பிரபலமாயிருந்தவர் மன்மோகன்.
பி.வி. நரசிம்மராவின் அமைச்சரவையில் மன்மோகன் சிங்
உயர் பீட நாற்காலிகள் பலவற்றில் அமர்ந்த அனுபவம் கொண்டவர். சண்டிகரில் அமைந்துள்ள பஞ்சாப் பல்கலைக் கழகப் பொருளியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது பொருளாதாரச் சிந்தனைகள் உலகமயப் பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கு உவப் பானவையாகத் தெரிந்ததால் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொருளா தாரம், வர்த்தகப் பிரிவில் பணியாற