டோனி பிரஸ்லர் கவிதைகள்
Coutesy: Sethu Book Art Project
மாலை
தாத்தாவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது
அவர் காணாமல் போகிறார்
இதுவரை சுற்றாத ஊரில் மறைந்திருக்கும் சந்துகளைக்
கண்டுபிடிக்கிறோம்
யாரோ ஒருவர் யாரோ வீட்டில்
அவருக்குச் சோறு போட்டிருக்கிறார்
‘அதுவே தன் தாய் வீடு
அங்கே தானிருப்பேன்’ அடம்பிடிக்கிறார்
கேட்கிறது குரல், அவரைக் காண முடியவில்லை
அவ்வீடு அங்கே தானிருக்கிறது
அவ்வீடு இவ்வூர் வந்த கதை
இவ்வூருக்கு அவர் வந்த கதையும் கேட்க முடிகிறது
அவர் நண்பன் தோன்றுகிறார்
இருவரும் மது அருந்துகிறார்கள்
அடுத்துவருவது
தாத