மோசடி வணிகமாகும் முனைவர் பட்ட ஆய்வுகள்
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் முனைவர் பட்ட ஆய்வு பயில்பவர்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2021 ஆம் ஆண்டு கணக்கின்படி 3,206 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளனர். தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சி எந்த அளவிற்கு அதிகரித்துள்ளதோ அதே அளவிற்கு வணிகமாக்கலும் அதிகரித்துள்ளது. தரமற்ற முனைவர் பட்ட ஆய்வுகள் தற்போது பரவலான பிரச்சினையாக மாறியுள்ளன. மேலும் பலவகையான முறைகேடுகளுக்கு முனைவர் பட்ட ஆய்வாளர்களும் ஆய்வு வழிகாட்டிகளும் உள்ளாகின்றனர்.
முனைவர் பட்ட ஆய்வில் இணைவதற்கு ஆய்வு நெறியாளர் தேர்ந்தெடுக்க மாநிலப் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த நடைமுறைச் சிக்கலைப் பயன்படுத்தி ஆய்வாளர்களிடம் ஆய்வுநெறியாளர்கள் பேரத்தில் ஈடுபடுகின்றனர்; ஆய்வில் இணைவதற்கு லட்சங்களைத் தர வேண்டியிருக்கும். அதன் பின்னரும் ஆய்வு மாணவர்கள் பணமாக, நேரமாக, உழைப்பாக, பாலியல்ரீதியாகப் பல்வேறு சுரண்டல்களை எதிர்கொள்கிறார்கள். இச் சுரண்டலுக்கு உள்ளாகுபவர்கள் வெளியில் நேரடியாக இவற்றைச் சொல்ல இயலாது. வெளியில் சொன்னால் ஆய்வு நெறியாள