கல்லாத பேர்களே நல்லவர்கள்!
‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்’ என்று புதிய கோணங்கியான பாரதி சொல்லும் சொல்லை, ஒவ்வொருவரும் நினைவுகூர வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்கள்! பள்ளிக்கூடங்கள் கட்டடங்களால் உருவாவதில்லை. குழந்தைகள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இதர ஊழியர்கள் இணைந்து உருவாக்கும் ஆனந்தக் கூடமே பள்ளி. அதற்கடுத்த வரிசையில்தான் பெற்றோர், ஊர்ப்பெரியோர், அரசு ஆகியோர்.
பள்ளியில் ஆய்வு செய்வதற்காக வந்திருந்த அதிகாரியொருவர், வகுப்பறைகளில் நுழைந்து வகுப்பறைத் தூய்மையையும் மாணவர்களின் அறிவையும் சோதித்தார். இறுதியில், ஓட்டுக்கூரைகூடச் சரியாக இல்லாத வகுப்பறைக்கு வெளியில் நின்றார். அங்கே, தரையும் பெயர்ந்து கிடந்தது. அந்தத் தரையில் இந்திய வரைபடம் சாக்பீஸால் வரையப்பட்டிருக்க, ஊர்களின் பெயர்கள் எழுதியிருந்த இடங்களில் குழந்தைகள் நின்றிருந்தனர். அங்கிருந்த ஆசிரியர், ஒரு மாணவரை விளித்து, ‘டேய், நீ சென்னையிலிருந்து காஷ்மீருக்குப் போ’ என்று சொல்ல, அந்த மாணவர், தன் இடத்திலிருந்து, வரையப்பட்டிருந்த பாதை வழியே வண்டியை முறுக்கிச் செல்வது போன்ற பாவனை