நீதிமன்றங்களின் நீதி
அண்மைக் காலமாக நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகளும் தீர்ப்புகளும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன. அதேவேளையில் நீதிமன்றங்கள் கவனிக்கத்தக்கத் தீர்ப்புகளையும் வழங்குகின்றன. அண்மையில் வெளியான இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ்நாட்டுச் சமூகநீதி வரலாற்றிற்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தன; இரண்டுமே மரபான சாதியமைப்பில் உடைவை ஏற்படுத்தக்கூடிய தீர்ப்புகள்.
இந்திய அளவில் கோவில் வழிபாடு, திருவிழா, கோவில் மரியாதை ஆகியவற்றிலும் சாதிய ஏற்றத்தாழ்வு பின்பற்றப்பட்டு வருவது கண்கூடு. அவற்றில் இன்றுவரையிலும் நடந்திருக்கும் மாற்றங்களுக்குப் போராட்டங்களும் சட்டத் திருத்தங்களும் காரணமாக இருந்திருக்கின்றன. சீர்திருத்தவாதிகள் குறைந்து இந்திய அரசியல் தலைவர்கள் வெறும் அரசியல்வாதிகளாகச் சுருங்கிவிட்ட நிலையில் கோவில் உள்ளிட்ட தளங்களில் இயங்கும் மரபான ஏற்றத்தாழ்வுகளை மாற்றியமைப்பதற்கான சூழல்கள் இல்லாமல் போய்விட்டன. இதுபோன்ற நிலையில் நீதிமன்றங்கள்மூலம் வெளிப்படும் சமூகநீதிசார்ந்த தீர்ப்புகளையே நம்ப வேண்டியிருக்கிறது. அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவும்