இன்பா
Courtesy: Sethu Book Art Project
அம்மா தட்டிய வறட்டிகள்
கற்றாழை நிறச் சட்டையோடு
அலுவலக நடைபாதைக் கூடைக்குள்
அமர்ந்திருந்தேன்
தொலைபேசி அழைப்பு
கட்டிலில் கட்டப்பட்ட
வாழ்வை உதறிவிட்டு
அப்பாவின் உயிர் பிரிந்துபோன செய்தி
இடிந்துபோன மினாரட்டாக
நொறுங்கியது மனம்
மூளையில் உறைந்திருந்த
ஊமைத் தீ நீர் உடைய ஆரம்பித்தது
நரம்புகள் நடுங்க
ஏர் இந்தியாவின்
நான்கு மணி நேரப் பறத்தலில்
அரை இரவு கடந்து
எகிறிக் குதித்து ஓடியதில்
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க
கலைந்த ஆடைகளுடன்
குரல் உடைத்து அழுது
உறவுகளைத் தழுவிச் சரிகிறேன்
இதற்குமேல் ஒன்றுமில்லையென
ம