ஆதி திராவிடர் இயக்கம் தேக்கநிலைக்கு நகர்கிறதா?
சுயமரியாதை இயக்கம் எவ்வாறு ஆதி திராவிடர்களுக்கு உதவியாக இருந்ததோ அதுபோல ஆதி திராவிடர்களின் மக்கட் தொகை பிராமணரல்லாதோர் இயக்கத்துக்குத் துணை புரிந்தது. அக்கால உதவியை நினைவூட்டுவது என்றால் ஆதி திராவிடர்கள் சாதி திராவிடர்களால் சுரண்டப்பட்டதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
இந்து சாதியக் கட்டமைப்பால் ஆதி திராவிடச் சமூகங்கள் (பட்டியலில் உள்ள அனைவரையும் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது) தொடர்ந்து ஒடுக்கப்படுவதால் அச்சிக்கலை விவாதிப்பது தவிர்க்க இயலாதது. அவர்கள் யார், அவர்களுக்காகப் பாடுபட்டது யார், அவர்களைவிடுவிப்பது எது எனும் என்ற கேள்விகள் விவாதப் பொருளாக இருக்கின்றன. இக்கேள்விகள் கருத்தியல், பொருளியல் சார்ந்தவை. அவர்களுக்காக நாங்கள்தான் பாடுபட்டோம் என்றும், உங்களுக்கு முன்பே எங்களுக்காக நா