அந்தமில்லா நல்லறம்
செவ்வியல் இலக்கியமானது குறிப்பிட்ட காலம், இடம், பொருள் சார்ந்ததாக அல்லாமல் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியது; பிரதேச எல்லைகளைக் கடந்தது. உலக மானுடரனைவருக்கும் பொருந்தக்கூடியதாகவும் போற்றியொழுகக்கூடியதாகவும் மாறும் தன்மையுடையது. செவ்வியல் படைப்புகள் ஏதோ குறிப்பிட்ட இடத்தில் தோன்றியிருந்தாலும் உலகப் பொதுமை என்பதே செவ்வியல் இலக்கியத்தின் தனித்துவப் பண்பாகும். தமிழ்ச் சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே. ஏனென்றால், பிற்காலத்தில் அம்மொழியில் தோன்றக்கூடிய இலக்கியங்களுக்குத் தாய்நிலமாக, இலக்கியத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்வது இவ்விலக்கியங்களே.
செவ்வியல் இலக்கியங்களின் தாக்கத்தினால் உந்தப்பட்டு வெவ்வேறு படைப்புகள் வருவதியல்பு. தமிழில் இராமாயணம், மகாபாரதம் போன்றன செவ்விலக்கியங்களிலிருந்து ஏதோவொன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை மையங்கொண்ட பல்வேறு படைப்புகள் வெளிவந்துள்ளன. உதாரணத்திற்கு அகலிகை கதை, அரவான் கதை, சீதையின் அக்கினிப் பிரவேசம் என அந்தந்தக் காலத்திற்கு ஏற்ப அக்கதைகளை அப்படியே ஏற்றுக்கொண்டோ, சிறிது மாற்றியோ அல்லது முற்