ஒரு ரமளான் இரவு
ஓவியம்: மணிவண்ணன்
தோளில் ஏணியுடன் வரும் பஞ்சாயத்து ஆள் ஏற்றி வைக்கும் கண்ணாடி முக்குக் கல்விளக்கு எட்டுமணிவரை அழுதபடி எரிந்துகொண்டிருக்கும். எட்டு மணிக்குமேல் கண்ணாடி முக்கில் மனித நடமாட்டம் இருக்காது. ஜின்கள், ரூஹானியத்துகள் போன்ற ஈமானிய அரூபிகள் புழங்கும் நேரம் அது. மலைவாதை, பேய் போன்ற காஃபிர் அரூபிகளின் புழங்குதளமும் கண்ணாடி முக்குதான். கூப்பிடு தூரத்தில் பண்டாலைபுரம் முஹ்யித்தீன் பள்ளியில் அடங்கியிருக்கும் ஷெய்கு, ஈமான்கொண்டவர்களை அரூபிகளிடமிருந்து பாதுகாத்து வந்தார். ஆபத்தான தருணங்களில் “யா... முஹ்யித்தீனே,” என்று கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவுவார். முதலில் குதிரையின் குளம்படி ஓசையும் தொடர்ந்து சாட்டையால் அடிக்கும் சத்தமும் கேட்க