தலித்துகளும் இலக்கியமும்
2010க்குப் பிறகு எழுத வந்த தலித் படைப்பாளிகளின் பார்வைக் கோணங்கள் வேறுபட்ட, நுணுக்கமான அவதானிப்புகளைக் கொண்டதாக இருப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் குரலாக வெளியாகும் படைப்புகளின் அதிகரிப்புக்கும் ஒடுக்குமுறைகளை மட்டும் பேசுவது தலித் இலக்கியமாகாது என்கிற புரிதலை நோக்கிய நகர்வுக்கும் அவர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளம் முக்கியமானது.
தலித்துகளின் இலக்கியப் பங்களிப்பு வரலாறு நெடுகிலும் இருந்துவந்தாலும் 1990களில்தான் தலித் இலக்கியம் என்கிற வகைமை உருவானது. அது நிகழும்போதே தலித்துகளிடமிருந்தும் தலித் அல்லாதோரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. சாதிப்பெருமை பேசிய எழுத்துக்களை வட்டார இலக்கியமாக ஏற்றுக்கொண்டு, சாதியப் பாகுபாட்டு அம்சங்களைச் சமூக யதார்த்தமாகச் சொல்லியவர்களே சாதியால் நிகழும் சிக்கல்களைப் பேசும் தலித் கல