கீழ்ப்படிதலின் இசை!
1999 இல் வெளியான ‘தலித் கலை கலாச்சாரம்’ என்ற நூலில் கே.ஏ. குணசேகரன் இப்படி எழுதுகிறார்: “பாளையங்கோட்டையில் ஒரு கல்வி நிறுவனத்தில், ஒருவர், அதிகாலையில் பெண்கள் உட்பட இருபது பேருக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பறை ஆட்ட அடவுகள், பறை வாசிப்பு முறைமைகள் ஆகியன சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஒரு சிலர் கைகளில் பறை இருந்தது. சொல்லிக் கொடுத்தவரும் ஒரு இளைஞர். ஆனால் அவர் தலித் அல்ல. அவர் கூத்துப்பட்டறையிலோ சென்னை கலைக்குழுவிலோ பறை ஆட்டம் கற்றுக்கொண்டவர் என்று மட்டும் எனக்குப் பட்டது. (அவருக்கு) கற்றுக் கொடுத்தவர் எனது ‘தன்னனானே’ கலைக்குழுவில் பறை வாசித்த தலித் இளைஞர் என்பதும் மனதில் நினைவுக்கு வந்தது. எனக்குள் ஏதோ என் சொத்தினை வேறு ஒருவன் அபகரித்துக் கொண்டுவிட்டதான கொதிப்புணர்வு ஏற்பட்டது.”1
தமிழக தலித் அரசியல் வரலாற