“ஏற்றத்தாழ்வற்ற சமூகமே எங்கள் இலக்கு”
பவுத்த அரசியல் செயற்பாட்டாளரான மு.பெ. முத்துசாமி பேராசிரியரும் வழக்கறிஞரும் தொழில்முனைவரும் ஆவார். இந்திய கணசங்கம் கட்சியின் நிறுவனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்திலுள்ள எம். மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர். பிறப்பு 10-9-1956 (69). தந்தையார் மு. பெருமாள், தாயார் பாப்பாத்தி அம்மாள். ஆரம்பக் கல்வியை எம். மேட்டுப்பட்டி அரசு ஆரம்பப் பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியைத் திருச்சி மாவட்டத் தொட்டியம் அருகேயுள்ள தலைமலைப்பட்டியிலும் கற்றவர். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்ற பின் பி.ஏ. புவியியல் பட்டமும் சென்னைப் பல்கலையில் முதுகலை அறிவியல் பயன்பாட்டுப் புவியியல் பட்டமும் பெற்றார். முதுநிலை நிறைஞர் ஆய்வுப் பட்டத்தை அதே சென்னைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் பெற்றார். சென்னைச் சட்டக் கல்லூரியில் மூன்றாண்டு பி.எல். பட்டப் படிப்பையும் முதுநிலைக் குற்றவியல் சட்டப்படிப்பையும் முடித்தார். தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலராகவும், பின் கரூர், நாமக்கல் அரசு கலைக் கல்லூரிகளில் புவியியல் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றிப் பணிநிறை