மொழி - நாடு - இனம்
சி.வை. தாமோதரம் பிள்ளை தமிழர்கள் பாஷாபிமானம், தேசாபிமானம், இன அபிமானம் போன்றவை இல்லாமல் தற்குறிகளாக இருப்பதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளதை ஆய்வறிஞர் பொ. வேல்சாமி ‘தேசாபிமானம் – பாசாமிமானம்’ (உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம், ப. 191) என்னும் கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார். மேலும், தேசியக் கொள்கையின் ஊடான உந்துதலினால் பதிப்புத் துறையில் இறங்கிச் செயல்பட்டவர் தாமோதரம் பிள்ளை. ஆனால் கல்வித்துறைப் புலமையாளராகப் பதிப்புத் துறையில் கால் பதித்தவர் உ.வே.சா. என்று இருவருக்குமான நோக்கங்களின் வேறுபாட்டையும் பதிவுசெய்துள்ளார். சி.வை.தா. குறிப்பிடும் பாஷாபிமானம், தேசாபிமானம், இன அபிமானம் என்னும் மூன்றும் இணைந்து, சி.வை.தா., உ.வே.சா ஆகிய இரு பெரும் ஆளுமைகளின் கலவையாக அமைந்த மகத்தான ஆளுமை மு.ரா. கந்தசாமிக் கவிராயர்.
இவர் இராசபாளையம் அருகில்