தலித் வரலாற்று மாதம்
ஓவியம்: மு. மகேஷ்
வரலாறு என்பது எப்போதும் மையநீரோட்டத்தின் வரலாறாகவே இருந்துவருகிறது. மையநீரோட்டம் எப்போதும் பெரும்பான்மை சார்ந்த பெரும்போக்காகவே இருந்துவருகிறது. இத்தகைய வரலாற்றுப் பதிவுகள் இயல்பாகவே விளிம்பு நிலைச் சமூகங்களையும் அவர்களது வாழ்வையும் பண்பாட்டையும் இருட்டடிப்பு செய்கின்றன. இத்தகைய சமூகங்களில் குறிப்பிடத்தக்க பிரிவினர் தலித்துகள். மைய நீரோட்ட வரலாற்றுப் பதிவுகளிலும் கதையாடல்களிலும் பெரிதும் புறக்கணிக்கப்பட்டுவந்த தலித்துகள் தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் வரலாறு என இதுகாறும் பதிவாகியிருப்பவற்றின் போதாமைகளைக் கேள்விக்குட்படுத்துவதிலும் தீவிரமாகச் செயலாற்றிவருகிறார்கள். வரலாறு குறித்த கருத்தியல்களில் வலுவான உடைப்பை ஏற்படுத்தியவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். தமிழ்நாட்டில் அயோத்திதாசப் பண்டிதர் வரலாறு குறித்த புதிய அணுகுமுற