மாயைக்கு அப்பால்

வருடம் நினைவிலில்லை. அனேகமாக 1983 அல்லது 1984. அந்தக் காட்சி என் மனத்தில் பசிய தாவரமெனப் படர்ந்து கிளைத்திருக்கிறது. பச்சையம் அடர்ந்த என் இளம்பருவத்தின் அதிசய நிகழ்வுகளில் அதுவும் ஒன்று.
கையாலேயே நீவிநீவி, சுருக்கங்களைப் போக்கி, நன்கு மடித்த இரண்டு புடவைகளைத் தன் தலையணையடியில் வைத்துப் பாதுகாப்பது பாட்டியின் வழக்கம். அதிலொன்றை எடுத்துக் கட்டிக்கொண்டு, தன் வழக்கமான அலங்காரத்துடன் சோஃபாவில் அமர்ந்திருந் தார் பாட்டி. சிறு பரபரப்புடன் இருந்தது வீடு. தாத்தா உள்ளறையில் வழக்கம்போல எழுதிக்கொண்டிருந்தார். எதைப்பற்றியும் லட்சியமில்லாத குழந்தைகள் குறுக்கும்நெடுக்குமாய் அலைந்ததை எப்போதும்போல பாட்டி கண்டித்தார். அந்தத் திட்டு எங்களுக்கு மட்டு மில்லாது அம்மாவுக்கும் சேர்த்தே விழும். எங்களை மாடிக்கு அழைத்துச் சென்ற அம்மா, அன்றைக்கு எங்கள் வீட்டுக்கு ஜெய
