உலகின் கடைசி கம்யூனிஸ்ட்?

ஒருவனின் நண்பர்கள் யார் என்பதை வைத்து மட்டுமல்ல, எதிரிகள் யார் என்பதை வைத்தும் அவன் எத்தகையவன் என்பதைச் சொல்லிவிட முடியும். பிடல் காஸ்ட்ரோ (ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) வாழ்வில் மட்டுமல்ல, சாவிலும் பெரும் சர்ச்சைக்குரிய தலைவராகவே இருந்தார். முழுமையான வாழ்வை வாழ்ந்து 90ஆவது வயதில் மறைந்த காஸ்ட்ரோவின் மரணத்திற்காக வருந்துவது சம்பிரதாயம் மட்டுமே. ஆனால், உலக அளவில் இடதுசாரிக் கட்சிகள் - இயக்கங்கள் மத்தியில் இன்று அவரைப் போன்ற அசாதாரணமான தலைவர் யாரும் இல்லாதது பெரும் வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது.
ரஷ்யா உட்பட மேற்கத்திய நாடுகள் எதுவும் தங்களது குடியரசுத் தலைவரையோ பிரதமரையோ காஸ்ட்ரோவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுப்பவில்லை. கனடா நாட்டின் பிரதமர் காஸ்ட்ரோவின் மரணத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையில் அவரை ‘அசாதாரணமான தலைவர்’, &lsq
