“முன்னோடி, பின்னோடி என்பதற்கு என்னிடம் ஏதுமில்லை”
(அவர் என்னிடம் சொன்னது)
கலைப் படைப்பு: ஓர் அனுபவம். ஆழ்கடலில் நேரும் சலனத்தின் சாட்சியாகக் கடலின் மேல் தளத்தில் நேரும் நீர்க்குமிழ்.
கோடு: இருகோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும் பகுதி முட்டு, காயம், இருள். ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாத பகுதி வெளி . . . ஒளி . . .
உருவத் தோற்றம்: வரையப்படுவது அல்ல. ஜாலியாகச் சட்டையைக் கழற்றித் தரையில் வீசுவது.
வண்ணம்: காய்ந்த இலைச் சருகில் வண்ண பேத ஒளி விளையாட்டு மனத்திற்கு இதமானது.
கலைத் துறையில் வழிகாட்டி: சூரிய நமஸ்காரம் பண்ணுகிறேன்.
கலைப் படைப்பு - துறையில் கவனிப்பு: மக்கள் மத்தியில் பாரதியும் கண்ணதாசனும் எழுதியவை கவிதைகள், கவிஞர்கள். இவற்றுக்கு இடையிலான நுட்ப வேறுபாடுகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.</