கருணை வெளிப்படும் தருணம்
திருமண வாழ்த்துச் சுவரொட்டிகள் எல்லா ஊர்களிலும் இன்று பரவலாகக்
காணப்படுகின்றன.
நண்பர்களோ உறவினர்களோ தமது பெயரைப் போட்டுச் சுவரொட்டி அச்சிட்டு ஒட்டும்
இவ்வழக்கம் உருவான கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். தமக்குத் தொடர்ந்து வேலைகள்
வேண்டும் என்பதற்காக அச்சக உரிமையாளர்கள் தாமே செலவுசெய்து முதலில் சில
திருமணங்களுக்கு இப்படிப்பட்ட சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டியதாகவும் அது
படிப்படியாக மக்கள் வழக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் சொல்வதுண்டு. இது பெருமளவு
உண்மையாக இருக்க வாய்ப்புண்டு.
கண்ணுக்குத் தெரியும்படியான ஒரு விஷயத்தைத் திட்டமிட்டுப் பரப்ப முடிகிறபோது நுட்பமான கருத்தியல் தளத்தில் எத்தனையோ விஷயங்களைத் தாராளமாகப் பரப்ப முடியும் என்பதை ஊடகங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. நாளிதழ்களில் வெளியாகும் கல்வித் துறை தொடர்பான செய்திக