“வேறு வழியில்லை அக்கா”
இலங்கையில் நடந்து முடிந்த பெரும் போர் தமிழர் வாழ்வை மூடியிருந்தது. அங்கு அமைதியைப் போல ஒன்று தென்பட்டாலும், அது அமைதி இல்லை என்று மிக நிச்சயமாகச் சொல்ல முடியும். இது இலங்கைக்கு நான் மேற்கொண்ட இந்த இரண்டாம் பயணம். போருக்குப் பிந்தையது. கொண்டாட்டங்கள் இன்னும் முடிந்திருக்கவில்லை. சிங்கள தேசியக் கொடி பறக்காத வாகனத்தையோ கட்டடத்தையோ பார்ப்பது மிக அரிதாக இருந்தது.
நவம்பரில் நான் சென்றபோது தமிழர்களிடமிருந்த நம்பிக்கையும் தைரியமும் இப்போது
முற்றாக அழிந்துபோயிருந்தன. நண்பர்களாக அறியப்பட்டவர்களில் பலர் பேசவே மறுத்தார்கள்.
பல நண்பர்களைப் பார்க்கவே முடியவில்லை. பலரும் போர் முடியும் தருணத்தில்
புலம்பெயர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
“தமிழர்களுக்கும் ராஜபக்சே அதிபர் என்றால் இந்தக் கொண்டாட்டங்களைத் தவிர்த்திருக்க வேண்டும். தமி