வாழ்வை நிரப்பிய இலக்கியம்
புனைபெயரோ என நினைக்கத் தோன்றும் இயற்பெயரைக் கொண்ட ராஜமார்த்தாண்டனை,
கொல்லிப்பாவை ஆசிரியராக நான் அறிந்திருந்தேன். கொல்லிப்பாவை, பிரமிளுக்கு
முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகை. இலக்கியக் கூட்டங்களில் நான் எப்போதேனும் காண
நேர்ந்தபோது புகைமண்டலங்களுக்கிடையே இருந்தவரான காட்சியே எனக்கு நினைவிற்கு
வருகிறது.
மதுரைக்கு, தினமணி உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது, நான் குடியிருந்த தெருவிலேயே அவரும் வீடு பார்த்துக் குடிவந்த பின்னால் எனக்கும் அவருக்கும் நெருக்கம் கூடியது. மதுரையில் ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. ‘சந்திப்பு’ என்னும் பெயரில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கூட்டம் நடத்துவது என்று பிற நண்பர்களுடன் பேசி முடிவுசெய்தோம். முதற் கூட்டம் 13.0