ராஜமார்த்தாண்டன் - பல நினைவுகள்
எழுபதுகளின் முற்பகுதியில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் அரசினர்
கலைக்கல்லூரியில் சேர்வதற்காகத் தமிழ்நாட்டின் எல்லையோரப் பகுதிகளிலிருந்து ஒரு
பெரும் படை உள்ளே புகுந்தது. ஏதாவது ஒரு பிரிவில் இடம் கிடைக்கும் என்பதுதான் காரணம்.
இது கோடை முடிந்து கல்லூரிகள் திறக்கிற காலம். சித்தூர் கல்லூரியில் கார்காலக்
குளிர்ச்சி சூழ்ந்திருக்கும். இப்படியொரு காலத்தில்தான் ஒரு கையில் சிகரெட்டோடும்
மறு கையில் ஒரு இலக்கிய இதழோடும் அவரைப் பார்த்த நினைவு இருக்கிறது. இளங்கலைத்
தமிழிலக்கியம் முதலாமாண்டில் நானும் முதுகலை முதலாமாண்டில் ராஜமார்த்தாண்டனும்
சேர்ந்திருந்தோம். நான் பொள்ளாச்சி. அவர் கன்னியாகுமரி.
திருவனந்தபுரத்திலிருந்து மாற்றலாகி வந்திருந்த பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ் இலக்கிய வகுப்பு என்பதன் தோற்றத்தையே மாற்றியிருந்தார். முதல் ம