சஞ்சாரி பாவம்
திருவனந்தபுரம் செனட் ஹாலின் தாழ்வாரம் வழியாக ஒரு மலைப்பாம்புபோல உடல்
பெருத்து வெளியே நீளும் மக்கள் வரிசைக்குப் பின்னால் நிற்கும்போது நான் யோசித்தேன்
- மாதவிக்குட்டி எனக்கு யார்? இந்த இரவில் இத்தனை பொறுமையுடன் எதற்காக நான் இங்கே
காத்து நிற்கிறேன்? கூட்டம் மெல்ல நகர்ந்தது. அரைமணி நேரத்துக்குப் பின்பு நானும்
மாதவிக்குட்டியின் உடலருகில் வந்து சேர்ந்தேன். யாரோ கொடுத்த பூக்களை இரும்பு
பீடத்தில் வைத்த கண்ணாடிப் பேழைமேல் தூவி வணங்கினேன். அந்தக் கண்ணாடிக்குக் கீழே
உறங்கும் முகத்தைத் தேடிப் போவதிலிருந்து என் கண்களை மனப்பூர்வமாகத் தடைசெய்தேன்.
என் மனதுக்குள் பதினாறாவது வயதில் நான் பார்த்த தேஜோமயமான அந்த அழகு மட்டும்
போதும் என்று தீர்மானம் செய்திருந்ததனாலேயே அந்த முகத்தைக் கடைசியாகப்
பார்ப்பதிலிருந்து என் கண்களைப் பின்வாங்கச் செய்தேன். மறுநாள் பாளையம்