மஹாவம்சம்: பேரினவாதப் பிரதி
கேட்டுக் களைத்துப்போன வரி ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்: ‘நாட்டுப்பற்று கயவனின் கடைசிப் புகலிடம்’. இது புழக்கத்திலிருக்கும் பழைய வாசகம். சமகாலத்திற்குப் பொருத்தமான வசனம்: ‘பிரதிகள் அடிப்படைவாதிகளின் இறுதி அடைக்கலம்’. இன்றைய அடிப்படைவாதியின் ஆவேசமான குறும் புலப்பதிவுகளுக்குப் பின்னால் ஒரு புனிதப் பிரதி இருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு வேதாகமம் முஸ்லிம்களுக்கு திருக்குரான். பொது உடைமைவாதிகளுக்கு மார்க்ஸின் ‘பொது உடைமையின் திட்டச் சாதனை’. இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். சிங்களவர்களும் தங்களுக்கென ஒரு பிரதியை மீள்கண்டுபிடித்திருக்கிறார்கள். அது பௌத்தரின் போதனைகள் கொண்ட ‘தம்மபாதா’ அல்ல. சில உண்மைகளையும் கட்டுக் கதைகளையும் உள்ளடக்கியுள்ள மஹாவம்சம் (பெரும் வரலாற்றுப் பதியல்).
மஹாவம்சம்: மிகச் சுருக்கமான பொருளடக்கம்
<img align="right" border="0" height="300" class="img-responsive" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_image