எனது ஊர் அரங்கம்; என் பெயர் ஹபீப்
மார்ச் 3ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய நாடகவிழாவில் எங்கள் குழுவின்
குதிரை முட்டை நாடகத்தை நிகழ்த்திவிட்டு தொடர்ந்து அங்கேயே இருந்து பிற நாடகங்களைப்
பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மார்ச் 8ஆம் தேதியன்று ‘நயா’
தியேட்டரின் சரண்தாஸ் திருடன் என்னும் நாடகம் நடைபெற்றது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்
ஆறாம் முறையாக அந்நாடகத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். அன்று ஹபீப் சாப் மேடையில்
தோன்றவில்லை. உடல்நலமற்றிருப்பதால் குழுவுடன் பயணிக்க இயலவில்லை என்ற தகவலும்
வந்தது, நாடகமும் ஆரம்பித்தது. ஹபீப் தன்வீரின் மகள் நகீன் மற்றும் பல முகம்
தெரிந்த சத்தீஸ்கர் நாட்டுப்புற நடிகர்கள் இசைஞர்களின் நிகழ்த்துதலுடன் நாடகம்
நகர்ந்துகொண்டிருக்கையில் போலீஸ் வேடமிட்டு ஹபீப் அந்நாடகத்தில் தோன்றும்
காட்சிகள் மட்டுமின்றி சரண்தாஸ் திருடன் முழுவதும் ஹபீ