அவருடன் இருந்த தருணங்கள்
தமிழில் குறிப்பிடத்தகுந்த கவிஞரும் விமர்சகருமான ராஜமார்த்தாண்டனை நினைவுகூரும்
விதமாக ஜூன் 14, 2009 அன்று சென்னையிலுள்ள இக்சா புத்தக வளாக மையத்தில் மாலை 5.30
மணிக்குக் காலச்சுவடு சார்பாக அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. எழுத்தாளர் சா.
கந்தசாமியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன்,
மரணம் மார்த்தாண்டனைத் தன்வசப்படுத்திய கடைசித் தருணத்தை வருத்தத்துடன்
நினைவுகூர்ந்தார்.
வரலாற்று ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி பேசும்போது, ராஜமார்த்தாண்டன் ‘சின்னக் கபாலி’ என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளதைக் கூறினார். தனக்கும் மார்த்தாண்டனுக்குமான உறவு வலுவடைந்தது புதுமைப்பித்தன் படைப்புகளைத் தொகுக்கும்போதுதான் என்றார். புதுமைப்பித்தனின் வெளிவராத படைப்புகளைத் தொகுக்கும் பணியில் தான் ஈடுபட்டிருந்தபொழுது த