மழைக்காலத்தில் சந்தித்த மார்த்தாண்டன்
ஜூன் ஆறாம் தேதி (2009) காலை 9.30 மணி இருக்கும்; ராஜமார்த்தாண்டன் அலைபேசியில்
கூப்பிட்டார். ‘காலச்சுவடு’ அலுவலகத்திற்கு 11 மணிக்கு வரச்சொன்னார்.
‘அகிலத்திரட்டு’ப் பதிப்பின் நூறு பக்கம் மெய்ப்புத் திருத்த வேண்டும்; நேரில்
பேசலாம் என்றார். நான் சாவகாசமாய் 11 மணிக்கு மேல் போகலாம் என்றிருந்தேன். ஆனி
மாதம் என்றாலும் சாரல் மழை நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. மழைவெறித்தபின் போகலாம்
என்று நினைத்துக்கொண்டிருந்தபோது கண்ணன் அழைத்தான். ராஜமார்த்தாண்டனின் விபத்துப்
பற்றிச் சுருக்கமாகச் சொன்னான். அப்போது மணி 11.
நான் பத்து நிமிடங்களில் நாகர்கோவில் கோட்டார் பார்வதிபுரம் சாலையில் உள்ள ஜவஹர் ஆஸ்பத்திரிக்குப் போனேன். கண்ணனும் மைதிலியும் நின்றுகொண்டிருந்தார்கள். மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரி வரவேற்பறை