கவி, என்ன பாடினாலும் ...
தனிமையின் வழி
சுகுமாரன் |
காரண, காரிய விளக்கங்களைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் என்னை வசீகரித்த ஒரு சில கவிஞர்களில் சுகுமாரனும் ஒருவர். அவருடைய பல கவிதைகளுக்கு நான் வாசகன் என்பதைவிடவும் சற்றுக் கூடுதலாக ஒரு ரசிகன் எனக் கூறிக்கொள்ளவே விரும்புவேன். ஒரு கவிஞராக மட்டுமின்றி, மொழிபெயர்ப்பாளராகவும் விமர்சகராகவும் கட்டுரையாளராகவும் அவருடைய தேர்வுகளையும் மதிப்பீடுகளையும் கருத்துகளையும் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். இவை அனைத்திலுமே வெளிப்படும் அவரது நோக்கு, ரசனை என்பது எப்போ